சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த சிங்கப் பூரை, உலகவர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும் படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் லீ குவான் யூவ்.

சிங்கப்பூரின் முதல் பிரதமரான இவர், உடல்நலிவால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 23 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு சிங்கப்பூர் தாண்டி உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.

லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறுதிஅஞ்சலி செலுத்தினர். லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.

அவரது உடல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக வளாக பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விதோதோ, மலேசிய அரசர் அப்துல் கலீம் ஷா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். லீ யின் இறுதி சடங்கையொட்டி சிங்கப்பூர் முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது.

Leave a Reply