பசுக்களை கொல்வதை நாடுமுழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாஜக ஆட்சிசெய்யும் மகாராஷ்டிராவில் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அரியானா, ஜார்க்கண்ட் என்று அக்கட்சி ஆளும் பலமாநிலங்களிலும் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று ஆன்மீக வாதிகளுடனான ஒரு உரையாடலின் போது மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், பசுக்களை கொல்வதை நாடுமுழுவதும் தடை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், "இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து, வலிமையையும் பயன் படுத்தி நாங்கள் இதை தடைசெய்வோம். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாங்கள் முயற்சிசெய்வோம்" . பசு வதை தடை செய்யப்படும் என்ற பா.ஜ.க. வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply