பட்ஜெட்டில் சேவைவரி விலக்கு அறிவித்து, அது அமலுக்கு வருவதால் இன்றுமுதல் அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் குறைகிறது.

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி தாக்கல் செய்தார். அதில் சேவைவரியை சீர்செய்யும் நோக்கத்துடன் 12.36 சதவீதம் விதிக்கப்பட்டு வந்த சேவைவரி, 14 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். பலபுதிய சேவைகளை சேவைவரி விதிப்பு வரம்பின் கீழ் கொண்டுவந்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதேநேரத்தில் வெகுஜன பொழுது போக்கு அம்சங்களாக திகழுகிற அருங்காட்சியகங்கள், தேசிய பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், வனவிலங்குகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் ஆகியவற்றுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தவரி விலக்கு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள், தேசிய பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயம் ஆகியவற்றின் நுழைவுகட்டணம் குறைகிறது.

Leave a Reply