புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. பாஜக தலைமையிலான அரசின் முதலாவது அந்நிய வர்த்தகக்கொள்கை இது என்பதால், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டெல்லியில் நடை பெறும் நிகழ்ச்சியில் புதிய அந்நியவர்த்தக கொள்கையை மத்தியவர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என தெரிகிறது.

முன்னதாக, சிறப்புபொருளாதார மண்டங்களுக்கு முக்கியத்துவம் மற்றும் தொழில்துறை வட்டி மானியம் உள்ளிட்ட பலவற்றை இடம்பெற செய்ய சிஐஐ. போன்ற தொழில் துறை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சலுகைகள் இடம்பெறும் என கோவை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave a Reply