பிரதமர் நரேந்திர மோடியின் ஏப். 2-ம் தேதி பெங்களூரு வருவதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் எம்என்.ரெட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பெங்களூரு பசவன குடியில் ஏப்.2-ம் தேதி பா.ஜ.க மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதனையொட்டி மாநகரில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸôர் தீவிர கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டையொட்டி 2,3-ஆம் தேதிகளில் 20 பெட்டாலியன் நகர ஆயுதப் படை, 50 பெட்டாலியன் கர்நாடக ஆயுதப்படை, 30 பெட்டாலியன் மத்திய ஆயுதப்படை, மத்தியதொழிலக பாதுகாப்பு படையினர் 500 பேர் உள்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அன்றைய தினம் பிரதமர் வருகையொட்டி விமான நிலையத்திலிருந்து பசவனகுடி மாநாட்டு மைதானம் வரை உள்ள சாலைகளில் போக்குவரத்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மாநாட்டு நடைபெறும் மைதானம், முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பாதுகாப்பிற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Leave a Reply