உருக்கு உற்பத்தியில் சீனாவைவிட அதிகளவில் இந்தியா உற்பத்தி செய்யவேண்டும். ஏற்கெனவே உருக்கு உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சி விட்டோம். இப்போது சீனாவை விஞ்சவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்க்கேலா செயில் உருக்கு ஆலையின் விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசுகையில் மோடி மேலும் பேசியதாவது .

எந்தத் துறையிலும் நாம் எந்த நாட்டுக்கும் பின்னால் இருப்பதை ஏற்கமுடியாது. உருக்கு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டியது அவசியம். ரூ. 12 ஆயிரம் கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவாக்கபணி காரணமாக உற்பத்தி 45 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முன்பு இந்த ஆலை 20 லட்சம் டன் உற்பத்தி செய்தது.

இந்தியாவின் இளைஞர்கள் சக்தி அதிகரித்துவருகிறது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதம்பேர் இளைஞர்கள் தான். அடுத்த 10 வருடங்களில் இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் திறன்வளர்ப்பை உரியவகையில் மேற்கொண்டால் நாடு வளம்பெறும்.

இந்திய கனிமவளங்கள் நாட்டின் மேம்பாட்டுக்கும் தொழில் துறை வளர்ச்சிக்கும் முறையாக பயன் படுத்தப்பட வேண்டும், நமது கனிமவளங்களை அடுத்த நாடுகளுக்கு வர்த்தகம் செய்வதன் மூலம் பொருளாதார வளரும் ஆனால் நான் இதை விரும்ப வில்லை . இதை வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் .

வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டும் , மற்றெந்த நாடுகளில் முதலீடு செய்வதை காட்டிலும் இந்தியாவில் முதலீடுசெய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

நாட்டின் பலபகுதிகளும் சீரான வளர்ச்சி காண வேண்டுமென்று விரும்புகிறேன். மேற்குபகுதியில் வளம்பெறும் அதே வேளையில், கிழக்கு பகுதிகளில் கவனம்செலுத்த வேண்டும். கனிமவளத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் ஒடிசா மாநிலத்துக்கான ராயல்டியை ரூ.25,000 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது . ஒடிசா மாநிலம் வளர்ச்சி பாதையில் உள்ளது நிலக்கரி வளம் உள்ள ஒடிசா, சத்தீஸ்கர், பிஹார் மாநிலங்கள் கனிம ஏலங்களில் மூலம் பயனடைகின்றன . வெளிப்படையான ஏலம்மூலம் நாடு ரூ. 2 லட்சம் கோடி வருமான ஈட்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply