பெங்களூருவில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் பாஜக.,வின் தேசிய செயற்குழு நடக்கிறது. மாநகரின் மையபகுதியில் உள்ள ஓட்டல் லலித் அசோக்கில் தேசிய செயற்குழு கூட்டமும், மறுநாள் காலை பாஜ காரியகமிட்டி கூட்டமும் நடக்கிறது. அன்று மாலை பசவனகுடி நேஷனல்

கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். செயற்குழுவில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், கட்சியின் தேசிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

தேசிய செயற்க்குழுவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை அமித்ஷா பெங்களூரு வந்தார் . அசோகா ஓட்டலில் தங்கும் அவர் மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து பெங்களூரு வருகிறார். மூன்று நாட்கள் அவர் தங்கி பாஜ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply