தமிழகத்தில் நடந்த கடையடைப்பு போராட்டம் விவசாயிகளை ஏமாற்றும்செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் திருவானைக் காவல் கல்லணை பிரிவு சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு அடிக்கடி உயிர்பலி ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்திவந்த நிலையில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொண்டயம் பேட்டை இரணியம்மன் கோவில்பகுதியில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ''கடந்த நான்கு வருடங்களில் இந்தபகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இதுவரை ஆறுபேர் இறந்துள்ளதாகவும், 28க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் புகார்கள் வந்ததால் விபத்துக்களை தடுக்கும்வகையிலும், அதில் நிரந்தரமாக தடையற்ற போக்குவரத்திற்கு உதவும் வகையிலும் மேம்பாலம்கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறி, கடந்த 28ஆம் தேதி தமிழகத்தில் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம் மத்திய அரசையும் கண்டித்து நடத்தப்பட்டதால் அதில் பாஜக. பங்கேற்கவில்லை. இந்தவிஷயத்தில் மத்திய அரசு என்ன செய்ய முடியும், போராட்டக்காரர்கள் கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாய் போராட்டத்தில் இருந்திருப்பேன். அதைசெய்யாமல், சிலர் இந்த பிரச்னையை மத்திய அரசுக்கு எதிராக திருப்பிவிட்டு அரசியல் செய்கிறார்கள். இது தவறான செயல். நடந்த கடையடைப்பு போராட்டம் விவசாயிகளை ஏமாற்றும் செயலாகத் தான் இருக்கு.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கொடுக்கும் சரியான தண்ணீரை கர்நாடகம் கொடுப்பதில்லை. உபரி நீரைத் தான் கொடுக்கிறார்கள். விரைவில் முறையான சரியான தண்ணீர்கிடைக்க மத்திய அரசு வழிசெய்யும்.

முல்லைப்பெரியாறு பிரச்னையில் மோடி தலைமையிலான அரசு தலைமை ஏற்ற மூன்று மாதங்களுக்குள் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி முல்லைபெரியாறு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அதைப்போல மெகேதாட்டு பிரச்னையிலும் தக்க நடவடிக்கை எடுக்கும்'' , தமிழகத்தில் நடந்த கடையடைப்பு போராட்டம் விவசாயிகளை ஏமாற்றும் செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் கல்லணை பிரிவு சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு அடிக்கடி உயிர் பலி ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்டவை தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொண்டயம் பேட்டை இரணியம்மன் கோவில் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ''கடந்த நான்கு வருடங்களில் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இதுவரை ஆறு பேர் இறந்துள்ளதாகவும், 28க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் புகார்கள் வந்ததால் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், அதில் நிரந்தரமாக தடையற்ற போக்குவரத்திற்கு உதவும் வகையிலும் மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறி, கடந்த 28ஆம் தேதி தமிழகத்தில் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம் மத்திய அரசையும் கண்டித்து நடத்தப்பட்டதால் அதில் பா.ஜ.க. பங்கேற்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்ய முடியும், போராட்டக்காரர்கள் கர்நாடக அரசை கண்டித்து கடையடைப்பு நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாய் போராட்டத்தில் இருந்திருப்பேன். அதை செய்யாமல், சிலர் இந்த பிரச்னையை மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விட்டு அரசியல் செய்கிறார்கள். இதுதவறான செயல். நடந்த கடையடைப்பு போராட்டம் விவசாயிகளை ஏமாற்றும் செயலாகத்தான் இருக்கு.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கொடுக்கும் சரியான தண்ணீரை கர்நாடகம் கொடுப்பதில்லை. உபரி நீரைத்தான் கொடுக்கிறார்கள். விரைவில் முறையான சரியான தண்ணீர் கிடைக்க மத்திய அரசு வழி செய்யும்.

முல்லைப்பெரியாறு பிரச்னையில் மோடி தலைமையிலான அரசு தலைமை ஏற்ற மூன்று மாதங்களுக்குள் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி முல்லை பெரியாறு பிரச்னைக்கு முற்று புள்ளி வைத்தார். அதைப்போல மெகேதாட்டு பிரச்னையிலும் தக்க நடவடிக்கை எடுக்கும்''. மோடி இதைப் பற்றி எங்கும் உறுதியளிக்க வில்லையே என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ''நாங்கள் ஒன்றும் வாய்ச்சொல் வீரர்கள் இல்லை. செயலில் காட்டுவோம்'' என்றார்..

Leave a Reply