ஹாவீர் ஜெயந்தி இன்று நாடுமுழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மஹாவீர் ஜெயந்தி இன்று நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடபட்டு வருகிறது .இந்நன்னாளில் மனிதன் முழு அமைதியும் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்று வழிகாட்டிய மதிப்பிற்குரிய இறைவன் மஹாவீர்க்கு, தலை வணங்கிறேன் என்று குறிப்பிட்டார்.

One response to “மஹாவீர் ஜெயந்தி வாழ்த்து”

 1. Dr.S.Madhavan says:

  இன்று மஹாவீர் ஜெயந்தி

  உலகம் போற்றும் ஒப்பற்ற வாழ்வியல் அஹிம்சை வாழ்வியல் ….!

  எண்ணம்,சொல்,செயல் மூன்றாலும் எவருக்கும் துன்பம் தராத உயர்சிந்தனையை உலகுக்குத் தந்த ஒப்பற்ற சமயம் ஜைனம் – சமணம் – அமணம்….!!

  புத்தர் சமணராய் இருந்த பின்தான் ஞானம் பெற்றார் .
  காந்திக்கு அஹிம்சைக்கு கோட்பாட்டைத் தந்ததில் முதலிடம் வகிப்பது சமணமே …

  காந்திவழியில் மண்டேலாவை இன்ன பிற அஹிமைப் போராளிகளைத் தந்தது சமணமே ….

  ஏன்…?! இன்றைய பொதுவுடைமையாளர் முதல் போராளிகள் பலர் கைக்கொள்ளும் போராட்ட உத்திகளைத் தந்தது சமணமே ….

  எனக்கெல்லாம் ஒரே கவலை …. இத்தனை ஆண்டுகள் சமணம் படித்து எத்தனை நெறிகளைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் …?!

  அண்மையில் தமிழ்ச் சமணர்களுடன் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கு ” அஹிம்சை நடை ” போதும் வாய்ப்புக்கு கிடைத்தபோது சமணர்களின் சால்புத்திறன், பண்பாட்டுநெறி கண்டு நெகிழும் , மகிழும் நெஞ்சைப் பெற்றேன் .

  மானுடம் உள்ளவரை சமணம் வாழும் ….
  சமணம் வாழும் வரை மானுடம் வாழும் ….

  ஏற்புநிலை மாறலாம்
  இயல்புநிலை மாறக்கூடாது ….

  மஹாவீரர் பிறந்த நன்னாடு
  மகிழ்வோடு நன்நாளைக் கொண்டாடு

  அனைவருக்கும் மஹாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் ….!

  வாழ்நாள் முழுவது வாழும் நன்னெறிகளைத் தந்தவருக்கு ஒருநாளேனும் வாழ்வளிப்போமே …!

Leave a Reply