மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பெண் அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவா நகரில், பிரபலநிறுவனம் ஒன்றில் வாங்கிய ஆடையை உடுத்திப்பார்க்க, ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்த போது, அங்கு ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்; போலீசில் புகார் அளித்தார்; கடை ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தன் கணவர் ஜுபினுடன் கோவா சென்றிருந்த ஸ்மிருதி, 39, அங்குள்ள, 'பேப் இந்தியா' என்ற பிரபல ஆடை, அலங்கார கடையில், 'ஷாப்பிங்' செய்தார்.சில ஆடைகளை வாங்கியவர், அவற்றை உடுத்திப்பார்க்க, ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார். அந்த அறையின், 'வென்டி லேட்டர்' அருகே, ஒருகேமரா இருப்பதை பார்த்து திடுக்கிட்டார். உடனே, வெளியே நின்றிருந்த தன் கணவர் ஜுபினை அழைத்த அவர், போலீசில் புகார் அளிக்க கூறினார். அந்தபகுதி, பா.ஜ., – எம்எல்ஏ., மைக்கேல் லோபோவை அழைத்து, விவரத்தை கூறினார்.தகவலறிந்து, அடுத்த சிலநிமிடங்களில், போலீஸ் உயரதிகாரிகள் அங்கு குவிந்தனர். கேமராவின் மின் இணைப்பு, அந்தகடையின் மேனேஜர் அறையில் உள்ள கம்ப்யூட்டரில் முடிவடைவதை கண்டனர்.

அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், கேமரா போன்றவற்றை பறிமுதல்செய்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். இது குறித்து, கடை ஊழியர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த நான்கு மாதங்களாக, கேமரா வைக்கப்பட்டிருந்ததை தெரிவித்தனர்.பெங்களூரில் இருந்த, கோவா மாநில முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகருக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், கோவா நகரின் முக்கிய கடைகளில், ஆடை மாற்றும் அறைகளில், கேமரா உள்ளதா என, சோதனையிட உத்தரவிட்டார். ஆடை மாற்றும் அறையில் கேமரா இருந்தது குறித்து, பேப் இந்தியா ஊழியர்கள் தரப்பில், 'ஆடைகள் திருட்டை கண்காணிக்கவே, கேமரா பொருத்தப்பட்டிருந்தது' என, தெரிவிக்கப்பட்டுள்ளதில் உண்மையில்லை என, போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply