மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த போது, பணக் காரர்களின் நலனுக்காக நாட்டை காங்கிரஸ் விற்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

தனது அரசை பணக் காரர்களுக்கு ஆதரவான அரசு என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருவதற்கு, இவ்வாறு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்ற பாஜக தேசியசெயற்குழுக் கூட்டத்தில் சனிக்கிழமை நிறைவுரையாற்றுகையில், இது தொடர்பாக அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏழைகள் மற்றும் சமூகத்தின் பலவீனமான மக்களுடைய அரசாகும். அவர்களின் முன்னேற்றத்துக்காக மத்தியரசு பல்வேறு திட்டங்களையும், முடிவுகளையும் எடுத்து செயல் படுத்தி வருகிறது.

எங்கள் அரசை பணக் காரர்களுக்கு ஆதரவான அரசு என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், உண்மையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், பணக்காரர்களின் நலனை கருத்தில்கொண்டு செயல்பட்டது. பணக்காரர்களின் நலனுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டைவிற்றது. ஏழைகளின் வரிப்பணத்தை வசதி படைத்தவர் களுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வீணாக செலவிட்டது.

வெறும் 20 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தது மூலம், அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருமானத்தை நாங்கள் ஈட்டியுள்ளோம். வசதி படைத்த வர்களிடம் இருந்து தான் இந்தப்பணம் அரசுக்கு வந்துள்ளது. பாஜக அரசு வசதி படைத்தவர்களுக்காக செயல்படுகிறதா என்பதை இதில் இருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

ஏழைகள் நலனுக்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரி வாயு உருளை இணைப்புகளை வழங்கியுள்ளது. ஐ.மு. கூட்டணி அரசு, எரிவாயு விலையை யூனிட்டுக்கு 4.2 டாலராக இருந்ததை 8.4 டாலராக அதிகரித்தது. ஆனால், நாங்கள் அதன் விலையை 5 டாலருக்கும் குறைவாக கொண்டுவந்துள்ளோம். வசதி படைத்த வர்களுக்காக பிரத்யேக வரி விதித்துள்ளோம்.

ஆகையால், மத்திய அரசை குறி வைத்து தெரிவிக்கப்படும் பொய்யான குற்றச் சாட்டுகளுக்கு எதிராக, பாஜக.,வினர் தன்னம்பிக்கையுடன் போராடவேண்டும். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்குடன் பாஜக.,வினர் பணியாற்றவேண்டும். அதுதொடர்பாக மத்திய அரசின் பிரசாரம் வெறும் பத்திரிகை செய்திகளாகமட்டும் இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசு வெற்றிகரமாக செயல்ப டுவதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வழிகாட்டிகளாக திகழ வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply