சிகரெட் பாக்கெட் டுகளில் எச்சரிக்கை விளம்பரம் வெளியிட பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை புறத்தே தள்ளிவிட்டு, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் பாக்கெட்டுகளில் 85 சதவீத இடத்தில் பட எச்சரிக்கை விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கு

மாறு சுகாதாரத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் . இதுதொடர்பாக ஒருகுழுவை அமைக்கும்படியும் அவர் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், சிகரெட், புகையிலை பொருட்களுக்கு ஆதரவான பா.ஜ.க எம்.பி.க்கள் பாராளுமன்ற நிலைக் குழுவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை நரேந்திர மோடி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே பெங்களூருவில் பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், புகையிலை பயன் பாட்டை ஊக்குவிக்கக் கூடாது என அரசு கருதுவதாக தெரிவித்தார்.

பாஜக எம்.பி., திலீப் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்துகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''தனிப்பட்ட முறையில் யாரும், எதுவும் சொல்லலாம். ஆனால் அரசுதான் உறுதியான நடவடிக்கை எடுக்கும். புகையிலை பயன் பாட்டினை ஊக்கு விக்காமல் இருக்க, பல்வேறு அணுகு முறைகள் பின்பற்றப்படும். இதை சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா முடிவு செய்வார்'' என பதில் அளித்தார்.

Tags:

Leave a Reply