சுற்றுச் சூழலை பாதுகாக்க இந்தியர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் மாநில வன மற்றும் சுற்றுச் சூழல் துறையின் இரண்டு நாள் மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய அவர், கரியமில வாயுவின் வெளிப்பாட்டை குறைத்தால் மட்டுமே சூற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

கரியமில வாயுவின் வெளி யேற்றத்தை குறைப்பது குறித்து பேசும் நாம் அதனை கட்டுப்படுத்த நமது வாழ்க்கைமுறையை மாற்றிகொள்ள முன் வருவதில்லை. சூற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க பாரம்பரிய வழி முறைகளை கடைபிடிக்க வேண்டும் நமது பாரம்பரியத்தில் இதற்கான தீர்வுகள் இருக்கும்.

இயற்கையை பாதுகாப்பதில் இந்தியாவுக்கு இருக்கும் உணர்வு குறித்து யாரும் கேள்விகேட்க முடியாது. உலகில் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு மிகக் குறைவுதான்.

இயற்கையை கடவுளாகபோற்றும் சமூகத்தில் இருக்கும் நாம், வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால், அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்.

நிலச் சட்டம் தொடர்பான அவதூறு கருத்துகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றன.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் வரம்பில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி, வனப் பகுதி வராது. ஆனால், இச்சட்டத்தால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவர், வனங்கள் அழிக்கப்படும் என்ற தவறான செய்தி பரவி வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக சரியான புரிதல் இல்லாதவர்களே இத்தகைய வதந்திகளை பரப்புகின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் மக்களை திசை திருப்ப வேண்டாம். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தேசியளவில் 10 நகரங்களில் காற்றுமாசு அளவு கண்காணிக்கும் திட்டத்தை இந்நிகழ்ச்சியில் பிரதமர் தொடங்கிவைத்தார்.

Leave a Reply