குஜராத் அரசின் மாநில சுற்றுலா துறை வளர்ச்சி கழகமும், தனியார் டிராவல்ஸ் நிறுவனமும் ,பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த ஊர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. 600 -க்கு பேக்கேஜ் டூரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து குஜராத் சுற்றுலாத்துறை கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம்காந்தி நகரில் இருந்து துவங்கி ஆமதாபாத் வழியாக வாத்நகர் செல்லும் இந்த பேக்கேஜ் டூர், மெகசானா மாவட்டத்தில் வாத்நகரில் மோடியின் பிறந்தகிராமம் மோடி இளமை காலங்களில் படித்த பள்ளி, அவரது மூதாதையர்களின் இல்லம் மற்றும் மோடி சிறுவயதில் அப்பகுதி ரயில்நிலையத்தில் டீ வியாபாரம் செய்த இடம் ஆகியவற்றினை சுற்றிபார்க்கும் ஒரு நாள் பேக்கேஜ் டூர் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சுற்றுலா பயணி ஒருவருக்கு தலா ரூ.600 வசூலிக்கப் படுகிறது. இவ்வாறு சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்ஸார் டிராவல்ஸ் நிறுவன மேலாளர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் குஜராத் வந்த நரேந்திர மோடி வைபரன்ட் குஜராத் மாநாடு நடத்தினார். அதில் சுற்றுலாத்துறையை ஈர்க்க புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி இந்த பேக்கேஜ் டூர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் நரேந்திரமோடி பிறந்த கிராமம் வரலாற்று முக்கியத்துவம வாயந்த் சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது என்றார்.

Leave a Reply