உலக சுகாதாரதினம் இன்று கடைபிடிக்கப் படுவதை தொடர்ந்து மக்கள் அனைவரும் சுகமான சுகாதாரமான வாழ்வுபெற நான் இறைவனை பிராத்திக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கொள்கை பாதுகாப்பான உணவே உடல்நலம் பேணுவதின் முன்னெச்சரிக்கை உலகசுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதை நாம் கடைபிடிக்க வேண்டும். உலக சுகாதார தினம் கடைபிடிக்கப் படுவதன் மூலம் மனிதனுக்கு சுகாதாரம் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்கான பழக்கத்தை ஏற்படுத்த இந்நாள் வலியுறுத்துகிறது. இதன் மூலம் மனித உயிர்களின் வாழ் நாள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply