எதிர்க்கட்சியினரின் பொய்பிரசாரங்களை முறியடிக்க பாஜக.வினர் எதிர்பிரசாரம் செயது பதிலடி கொடுக்க வேண்டும் என தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க உதயமான தினத்தை யொட்டி டில்லியில் நடந்த விழாவில் மூத்த தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் தேசிய தலைவர் அமித்ஷ கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசியதாவது; ; 35-வது தினத்தை வெற்றிகரமாக கொண்டாடி வருகிறது பா.ஜ.க ஷியாமா பிரசாத்முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, அடல் பிகரி வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கடும் உழைப்பால் வளர்ந்தது பா.ஜ.க தியாகத்தில் உருவான கட்சி. இதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை , நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நிலம் கையப்படுத்தும் மசோதா குறித்து எதிர்க் கட்சிகள் பொய் பிரசாரத்தையும் தவறான தகவலையும் கூறி பிரசாரம்செய்து வருகின்றனர்.இதனை முறியடித்த அவர்களுக்கு பா.ஜ. தொண்டர்கள் பதிலடிகொடுத்து எதிர்பிரசாரம் செய்ய வேண்டும்.

Leave a Reply