பிரதமர் மோடி பிரான்ஸ் வருவதற்கு முன்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஃபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்த எந்த அறிவிப்பும் இருக்காது என பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 16ம் தேதிவரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரான்ஸ்செல்லும் அவர், அந்நாட்டுடன் பொருளாதார கூட்டுறவை பலப்படுத்த விவாதங்களை மேற்கொள்கிறார். அத்துடன் பிரான்ஸில் உள்ள தொழிற்ச் சாலைகளைப் பார்வையிட உள்ளார்.

மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது ராஃபேல் போர்விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பது குறித்து பிரதமர் அலுவலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் வந்தடைவதற்கு முன்னர், ஒப்பந்தம்தொடர்பாக எந்த அறிவிப்பையும் தங்கள் நாடு வெளியிடாது என்றும், மோடியின் பயணம் இதனை யொட்டியது மட்டுமல்ல என்றும் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply