மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களுக்கு ஆறுசதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் 45 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடை வார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்திவழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலை படியில் ஆறுசதவீதத்தை உயர்த்த, ஆறாவது சம்பளகமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரைசெய்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதையடுத்து, நேற்று இதற்கான அறிவிப்பு வெளியானது. அரசு ஊழியர்களுக்கு தற்போது, 107 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இனி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு இதற்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது இதன் மூலம், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்

Leave a Reply