துர்க்மான்கேட் சம்பவத்தில் ஆம் ஆத்மி தொண்டருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரி வால் வீடு முன்பு பாஜக.,வினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாய் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்களை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அத்துடன், பாஜக தொண்டர்கள் சிலரையும் கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

துர்க்மான்கேட் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காருடன் மோட்டாளர்சைக்கிள் மோதியது. இதில் ஏற்பட்ட தகராறில், மோட்டார் சைக்கிளில் வந்த வரை காரில் இருந்தவர்கள் பயங்கர ஆயதங்களால் அடித்துகொன்றனர். உயிரிழந்த ஷாநவாஸ் என்ற நபரை அடித்துக் கொன்றவர்களில் சிலர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் என்று தெரியவந்துள்ளது.

Leave a Reply