விரைவான, தைரியமான, சமயோகித நடவடிக்கைகளின் மூலம் நாலாயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களையும்,ஆயிரத்துக்கும் அதிகமான அண்ணியர்களையும் மீட்டு உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தியுள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு.

சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட் ராப்பு மன்சூல் ஹாதி சவுதியில் தஞ்சம் புகுந்தார்.

இதனை தொடர்ந்து ஈரான் நாட்டின் பின்புலத்துடன் ஹவ்தி தீவிரவாதிகளும், சவுதியின் பின்புலத்துடன் அரசுப்படைகளும், அதிபரின் ஆதரவாளர்களும் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இதுவரை 700க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 2000 க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். தினம் தினம் 100 கணக்கானோரை எமனிடம் தாரைவார்க்கும் நிலைக்கு ஏமன் தள்ளப்பட்டுள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு உடனடியாக தனது மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. பிரதமர் மோடியின் நேரடி மேற்ப்பார்வையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், இணை அமைச்சர் வி.கே சிங்கும் களமிறங்கினர். இந்திய கப்பல்படை , விமானப்படை , இராணுவம், கப்பல் துறை , விமான துறை , இரயில்வே துறை, மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் களமிறக்கப்பட்டன, இவை அனைத்தும் மீட்பு பணிகளில் சரியாக ஒருங்கிணைக்கப் பட்டன.

இதில் வி.கே சிங் மார்ச் மாதம் 31ம் தேதி நேரடியாக ஏமனின் அண்டை நாடான ஜிபோத்தியில் முகாமிட்டு மீட்பு பணிகளை முடிக்கிவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சவூதி மன்னரிடம் தொடர்பு கொண்டு மீட்பு பணியில் எந்த இடையூறும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பொதுவாக அந்நிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளில் தேவையற்ற காலதாமதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் சிறிய முடிவுகள் என்றாலும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் அனுமதியுடனேயே எடுக்க வேண்டும். இல்லாவிடில் சிறிய சிக்கல்கள் கூட இருதரப்பு உறவில் பெரிய பிரச்சனையை உண்டுபண்ணி விடும். ஆனால் இங்கோ நமது வெளியுறவு துறையே நேரடியாக களத்துக்குச் சென்றது. இதனால் முக்கிய முடிவுகள் கூட எந்த காலத்தாமதமும் இன்றி உடனுக்குடன் எடுக்கப்பட்டன. இந்தியாவின் வேகத்தையும், திறமையையும் கண்ட அமெரிக்கா, பிரான்ஸ் , ஜெர்மனி உள்ளிட்ட 23 உலக நாடுகள் இந்தியாவின் உதவியை நாடின.

 


"தாய் நாடு திரும்ப நினைக்கும் அமெரிக்கர்கள் ஏமனில் உள்ள இந்திய தூதரத்தின் உதவியை நாடலாம், அமெரிக்கர்களை மீட்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை" 

அமெரிக்கா
 

சவூதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் வான்வழியில் பிரதமர் மோடியின் நேரடி தலையீட்டின் கீழ் இந்திய மீட்பு விமானங்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் பறக்க அனுமதி பெற்றதும், விரைவான ராஜதந்திர முடிவுகளாலும் தலைநகர் சானவில் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியிலும் ஒரே நாளில் மட்டும் 572 பேர் இந்திய போர் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர் . மொத்தம் 18 இந்திய விமானப்படை சிறப்பு விமானங்கள் மூலம் ஏமனில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2900 இந்தியர்களை மீட்டுள்ளனர். மேலும் மூன்று போர்க் கப்பல்ககள் மற்றும் இரண்டு பயணிகள் கப்பல்கள் மூலம் துறைமுகப் பகுதிகளில் இருந்து 1,670 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

 

"மிகக் கடுமையான போர்ச் சூழலிருந்து என் ஊயிரை மீட்ட இந்தியாவை என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன்".  

மீட்கப்பட்ட பங்களாதேஸ் நாட்டவர்

 

இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இது வரை நாம் அமெரிக்கவும், இஸ்ரேலும் அத்துமீறி ஒரு சில நாடுகளில் குண்டு வீசியதையும், தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளியதையுமே சாதனைகளாக கூறி வந்தோம், ஆனால் இன்று இந்தியா துப்பாக்கி குண்டு மழைகளுக்கும், குண்டு வெடிப்புகளுக்கும் மத்தியில் , நான்கயிரத்துகும் அதிகமான இந்தியர்களையும், 41 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான அன்னியர்களையும், ஏன் குறைப் பிரசவத்தில் பிறந்த சிசுவையும் இரத்தம் சிந்தாமல் மீட்டு சாதனை படைத்துள்ளது . 

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply