பிரதமர் நரேந்திரமோடி தனது ஜெர்மனி சுற்றுப் பயணத்தின் போது சுதந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்சந்திர போஷின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஷின் குடும்பத்தினரை 20 ஆண்டுகளாக உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தசந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அடுத்ததாக ஜெர்மன் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்திய வம்சா வளியினருடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நேதாஜி சுபாஷ்சந்திர போஷின் சகோதர் பேரன் சூர்யா போஷை சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹம்பர்க்கில் உள்ள இந்தோஜெர்மன் கூட்டமைப்பின் தலைவராக சூர்யாபோஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply