மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜகியுர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட நிலையில் "பயங்கர வாதிகளுக்கு எந்த ஒருநாடும் புகலிடம் அளிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேசளவில் நடவடிக்கை தேவைப்படுகிறது. பயங்கர வாதிகளுக்குப் புகலிடம் அளிக்க மாட்டோம், அவர்களை தண்டிப்போம் என்று அனைத்து நாடுகளும் உறுதியேற்கவேண்டும்.

உலகம் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவருகிறது. பல நாடுகளில், பயங்கரவாதம் புதிய வடிவங்களில் பரவி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம், பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கர வாதம் காரணமாக இந்தியா அனுபவிக்கும் வேதனையை, பிரான்ஸ்சும் உணரக்கூடும் என்று மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply