பிரதமர் நரேந்திரமோடி, தன் பயணத்தின் ஒருபகுதியாக, பிரான்சின், டவுலோஸ் நகரில் உள்ள,'ஏர்பஸ்' விமான நிறுவனத்திற்கு சென்றார். அவரை, அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் வரவேற்றனர். இதன் பின், விமானங்கள் தயாரிக்கும் தொழிற்ச் சாலைக்கு சென்று, அங்குநடக்கும் பணிகளை பிரதமர் பார்வையிட்டார்.

'ஏர்பஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாம்என்டர்ஸ் கூறியதாவது: இந்திய பிரதமர் எங்கள் தொழிற் சாலைக்கு வந்ததை கவுரவமாக கருதுகிறோம். அவரின்,'மேக்இன் இந்தியா' திட்டம் எங்களை ஈர்த்துள்ளது. இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனத்தின் விமானதயாரிப்பு தொழிற் சாலையை அமைத்து, பயணிகள் விமானத்தை தயாரிக்கதயாராக உள்ளோம். இது குறித்து, மோடியிடம் உறுதி அளித்துள்ளோம். இந்தியாவுடன், எங்களின் வர்த்தகதொடர்பு நீடித்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply