உலகத் தமிழர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து கடைபிடித்து வரும் புத்தாண்டு தினமான சித்திரை ஒன்று அன்று அனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து சிறப்புற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

ஜெய ஆண்டு பிறந்ததன் பயனாக இந்தியத் திருநாட்டில் தேசபக்தி மிக்க திரு நரேந்திர மோடி அவர்களின் வெற்றிமிகு ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை வாழ்த்தவும் வரவேற்கவும் வரிசையில் வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவுக்கு வேகமாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி அமைந்துள்ளது. நாடும; நம் வீடும; நாமும் அதனால் மகிழ்கின்றோம்.
மன்மத ஆண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை தருகின்ற தாமரையின் ஆட்சியை தமிழகம் கண்டிட திரு மோடி அவர்களின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம்.

இந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட மன்மத ஆண்டு வழி காட்டட்டும். மன்மத ஆண்டில் தமிழ் தமிழன் தமிழகம் உலகில் முதல் நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம் வெற்றி பெறுவோம். அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்றும் தாயகப்பணியில்

(பொன்.இராதாகிருஷ்ணன்)

Leave a Reply