விவசாயிகள் பாதிக்காமல் நிலம் கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

நிலம் கையகப்படுத்தல் அவசரசட்டம் மற்றும் மசோதாவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை சந்தித்துவருகிறது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் நிலம் கையகப்படுத்த புதியகட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜெர்மனியில் ஹன்னோவர் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதியகட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது"

இருப்பினும் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பாக இந்தியாவில் முதலீடுசெய்யும் போது சர்வதேச தொழில்துறையாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்ற தகவலை தெளிவாக தெரிவித்துள்ளார் .

" தொழில் தொடங்குபவர்களுக்கு வெளிப்படையான ஒப்புதல் நடைமுறைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. வெளிப்படையான மற்றும் துரிதமான நடவடிக்கைகளால், நீண்டகாலமாக முடங்கி கிடக்கும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடுசெய்து உள்ளது. இதனால் நமது பொருளாதாரம் ஒருபுதிய உத்வேகத்தை பெற்று உள்ளது," என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply