நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பேரன் சூர்யகுமார் போஸ், பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அவர் நேதாஜி குறித்த ஆவணங்களை பகிரங்கமாக வெளியிட நடவடிக்கை எடுக்கும் படி மோடியிடம் வலியுறுத்தவுள்ளார். சுதந்திர போராட்டத்தின்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டீஸ் அரசிற்கு எதிராக இந்தியதேசிய ராணுவத்தினை நிறுவிய நேதாஜி, சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை முன்னாள் பிரதமர் நேரு உளவுபார்க்க உத்தரவிட்டதாக சில கோப்புகள் வாயிலாக அம்பலாமானது.

இந்த விவகாரம் நேதாஜி குடும்பத்தினரை கடும்கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்தொடர்பாக ஜெர்மன் வரும் பிரதமர் மோடியிடம் புகார் உள்ளதாக ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜிபேரன் சூரிய குமார் போஸ் கூறியிருந்தார்.

இதையடுத்து அரசுமுறை பயணமாக ஜெர்மன் வந்திருந்த பிரதமர் மோடியை நேதாஜியின் பேரன் சூரியகுமார் போஸ் பெர்லின் நகரில் சந்தித்துபேசினார்.

Leave a Reply