தொழில்துறையில் இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்புகள் உள்ளது என ஜெர்மனியின் ஹனோவரில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

தொழில்துறையில் இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு இருதரப்புக்கும் பயன் தரும், இந்தியாவில் ஜெர்மன் தொழிலதிபர்கள் தொழில்தொடங்க உகந்த சூழல் ஏற்படுத்தப்படும் என இந்திய-ஜெர்மனி தொழில்முனைவோர் கூட்டத்தில் மோடி உறுதி அளித்தார். இந்தியாவில் முதலீடுசெய்துள்ள நாடுகளில் 8வது இடத்தில ஜெர்மனி உள்ளது. ஜெர்மனி நிறுவனங்களின் கூட்டுடன் 600 தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன மேலும் பல ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரவேண்டும்.

மேலும் தற்போது வெளிப் படையான, செயலூக்கம் கொண்ட நிர்வாகம் இந்தியாவில் உள்ளது, தொழில்களுக்கான அனுமதிவழங்குவது இப்போது அதிவேகத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் தொழில் நடத்துவது மிகவும் எளிமைப் படுத்தப்படும். புத்தகம் மற்றும் ஆராய்ச்சிக்கு இந்திய அரசு பெரிதும் ஊக்கமளித்து வருகிறது 'இந்தியாவில் தயாரிங்கள்' என்ற முழக்கத்தை வலியுறுத்தியும் மோடி ஜெர்மனியின் ஹனோவரில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசினார். –

Leave a Reply