ஒருமொழியால் அசைத்து பார்க்கக் கூடிய அளவிற்கு இந்தியாவின் மதச் சார்பின்மை பலவீனமாக இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இந்தியர்கள் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்புநிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் வானொலிகளில் சமஸ்கிருத மொழியில் செய்திகள் ஒலிபரப்பு செய்யப் பட்டதாகக் குறிப்பிட்டார்.

அப்போது இந்தியாவில்கூட சமஸ்கிருதத்தில் செய்திகள் ஒலிபரப்பானது இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அவ்வாறு ஒலிபரப்பினால் மதச் சார்பின்மைக்கு ஆபத்துநேரிடும் எனக் கருதப்பட்டதாகவும் மோடி தெரிவித்தார். யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்கிற அளவிற்கு ஒருவருக்கு தன்னம்பிக்கை இருப்பது அவசியம் என்றும் நரேந்திரமோடி பேசினார்.

Leave a Reply