பூஜ்யத்துடன் பூஜ்யம்சேர்ந்தால் பூஜ்யம் தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச்செயலர் அமித் ஷா.

பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக., சார்பில் கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்த நாள்விழாவில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பேசியபோது:

ஜனதா கட்சிகள் இணைந்து எவ்வளவுபெரிய கூட்டணி அமைத்தாலும், பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில், அது வெற்றிபெறாது. இங்கே பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம் தானே வரும். அதுபோலத் தான், பாஜக.,வுக்கு எதிராக நிதீஷ் குமார், லாலு பிரசாத்யாதவ் அமைக்கும் கூட்டணியும். ஐ.ஜ.தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதால் பாஜக.,வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

2010ஆம் ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவின் முதுகில்குத்திய நிதீஷ்குமார், காட்டாட்சி நடத்திய லாலுபிரசாத் யாதவுடன் மீண்டும் கைகோக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply