அரியானா மாநில பாஜ அரசு யோகா மற்றும் ஆயுர் வேத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அரியானா மாநிலபள்ளி குடங்களில் யோகா பயிற்சியும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் யோகாபயிற்சி செய்வதை அரியானா அரசு கட்டாயமாக்கி யுள்ளது. இதுதவிர மாநிலம் முழுவதும் 6500 கிராமங்களில் யோகாகலைகள் அமைக்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதவிர ஆயுர் வேத்திற்கும் அம்மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதற்கான் விளம்பரதூதராக பிரபலயோகா குருராம் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மூலிகைகாடு ஒன்றை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தலைவராக ராம் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கேபினட் மந்திரிக்குரிய அந்தஸ்தை ராம்தேவுக்கு கொடுக்கவும் அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இவற்றை செயல்படுத்தும் போது இந்திய மரபுகள், பாரம்பரியங்கள் அடிப்படையிலான விஷயங்கள் அரியானா மாநிலம் மும்மாதிரி மாநிலமாக திகழும் என்று அம்மாநில மந்திரி அனில் லிஜ் கூறினார்.

Tags:

Leave a Reply