வெளி நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி பயன் படுத்தி வரும் ஏர் இந்தியா விமானத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டது. இதைதொடர்ந்து மும்பையில் இருந்து மாற்று விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9ம் தேதி பிரான்ஸ் புறப்பட்டுசென்றார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு தினங்களுக்கு முன்பு ஜொ்மனி புறப்பட்டார். ஜொ்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்றிரவு பொ்லின் நகரிலிருந்து கனடா புறப்படதயாரானார். முன்னதாக அவர் பயன் படுத்தி வரும் ஏர் இந்தியா போயிங் 747/400 விமானத்தை தயார்செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது விமான இன்ஜினில் கோளாறு உள்ளதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக இந்தியாவில் உள்ள ஏர்இந்தியா அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. பொதுவாக மோடி வெளிநாடு செல்லும்போது அவருக்காக மாற்றுவிமானம் ஒன்று தயாராக இருக்கும். மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த மாற்றுவிமானம் உடனடியாக ெபர்லின் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானத்தில் பிரதமர் மோடி கனடா புறப்பட்டு சென்றார். பிரதம ரின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது் குறித்து அதிகா ரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்று விமானத் துடன் கூடுதல்விமான ஊழியர்களும் அனுப்பி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 18ம் தேதி மோடி இந்தியா திரும்புகிறார்.

Leave a Reply