விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யும் முயற்சியில் இனி ஈடுபடவேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

உத்திரபிரதேசத்தில் உள்ள மழையால் பாதிக்கபட்ட இடங்களுக்கு இன்று நேரில்சென்று பார்வையிட்டார்.மேலும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல்கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

விவசாயிகளுக்காக மத்தியஅரசு ஒதுக்கிய ரூ.506 கோடியை மாநில அரசு விவசாயிகளுக்கு ஒதுக்கியதா. அனைத்து கட்சிகளும் சேர்ந்து விவசாயிகளின் நலனில் அக்கறைசெலுத்த வேண்டும்.

நானும் ஒரு விவசாயியின் மகன்தான் விவசாயிகளின் நிலைமை எனக்கும் தெரியும்.பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மீது மிகவும் அக்கறைகொண்டவர் விவசாயிகளின் நிலைமையும் அவருக்கும் தெரியும்.

உத்தர பிரதேசத்தில் மழையால் 33 சதவீதம் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு முழுநிவாரண நிதியை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.விவசாயிகள் தற்கொலை செய்துவது வேதனையாக உள்ளது.இனி விவசாயிகள் யாரும் தற்கொலைமுயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.

Leave a Reply