தமிழகம் இன்னும், இரண்டு ஆண்டுகளில் மின் மிகை மாநிலமாக திகழும்,'' என, மத்திய மின்துறை அமைச்சர் பீயுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய மின்துறை அமைச்சர் பீயுஷ் கோயல், நேற்று காலை, டில்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்தபேட்டி: பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும், அதிக அக்கறை எடுத்துவருகிறார்.

மே மாத, கடைசிவாரத்தில், ஐந்து துறைகளின் மத்திய அமைச்சர்கள், தமிழகம் வர உள்ளனர். அவர்கள், மீனவர், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கண்டறிய, ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் அதிக மின்பற்றாக்குறை உள்ளது.

இந்த பிரச்னையை போக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதியமின் திட்டங்களை ஏற்படுத்த, 30 ஆயிரம்கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்ததிட்டங்கள் உருவாக்கப்பட்ட பின், தமிழகத்திற்கு, 6,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இன்னும், இரண்டு வருடங்களில் , 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்து, தமிழகம், மின் மிகை மாநிலமாகத் திகழும். இதனால், புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, தமிழகம் தொழில் துறையிலும் வளர்ச்சி பெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply