வீட்டில் முடங்கி கிடந்தால், எதுவும் தானாக தேடிவராது; ஊழல் நிறைந்த சாராய ஆட்சியைவிரட்ட ஒவ்வொருவரும், வீட்டைவிட்டு வெளியேவந்து போராட வேண்டும்

தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது. சாராயம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இங்குள்ள தலைவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறு கின்றனர். அது போன்ற தலைவர்களை வைத்துகொண்டு, தமிழகத்தை முன்னேற்ற வழியில்லை. இளைஞர்கள், பெண்களின் சக்தியை முழுமையாக பயன் படுத்தி, தமிழகம் உயர்வை நோக்கி செல்லவேண்டும்;

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மகளிருக்கான வலிமை, குழந்தை களுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை தரவேண்டியது, ஒரு அரசின் கடமை; அதற்காகதான் மோடி அரசு உள்ளது. தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும். நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் சம உயர்வு, சம அந்தஸ்து தரவேண்டும் என, பிரதமர் மோடி ஆசைப்படுகிறார்; அனைவருக்கும் வீடுகட்டி தர வேண்டும்; அந்தவீட்டில் சிறந்த கழிப்பறை, 24 மணி நேர மின்வசதி கிடைக்க வேண்டும் என்பதும் பிரதமரின் ஆசை. வீட்டில் முடங்கி கிடந்தால், எதுவும் தானாக தேடிவராது. ஊழல் ஆட்சியை, சாராய ஆட்சியை விரட்ட ஒவ்வொருவரும் வெளியே வந்து போராட்டம் நடத்த வேண்டும்.

தமிழ் மக்களை உயர்த்தி காட்டவேண்டும். தமிழ் கலாசாரம் உலகத்திற்கு குருவாக மாறவேண்டும். அடுத்த மாதம், மத்திய அமைச்சர்கள், உங்களை வீடுதேடி வந்து நேரிடையாக சந்திப்பர். இனி உங்களுடைய பிரச்னைகளை, டில்லிக்குசென்று கூற வேண்டியதில்லை. மத்திய அமைச்சர்களே, உங்கள் வீடுதேடி வந்து குறை கேட்பர். ஒவ்வொரு வாரமும், சனிக் கிழமை தோறும், தலைமை அலுவலகம் மற்றும் 42 மாவட்டங்களில் உள்ள பா.ஜ.க, அலுவலகங்கள், உங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக திறந்திருக்கும். அங்கு, எங்கள் ஊழியர்களை சந்தித்து, உங்கள் பிரச்னைகளை சர்வசாதாரணமாக தெரிவிக்கலாம். பிரச்னைகளை தீர்க்க, அவர்கள் நடவடிக்கை எடுப்பர். '' என, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல் பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., சார்பில், தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, செம்பரம் பாக்கத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிலக்கரி மற்றும் மின்துறை அமைச்சர் பீயுஷ் கோயல் கலந்துகொண்டு பேசினார்.

Leave a Reply