நரேந்திர மோடி இந்துஸ்தான் நாளிதழுக்கு அளித்த முழு நேர்காணல் விவரம்

பத்திரிகையாளர்:மோடிஜி,பத்து மாதத்தில் நீங்கள் சாதித்தது என்ன?

மோடியின் பதில் :கடந்த அரசையும் எனது அரசையும் ஒப்பிட்டு பாருங்கள் .இந்த அரசின் சாதனைகள் உங்களுக்கு புரியும்

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் வங்கி தொடர்ப்பு இல்லாத 12 கோடி ஏழை மக்களுக்கு விபத்து காப்பீடு,ஆயுள் காப்பீடு மற்றும் 5000 ரூபாய் கடன் வசதி கொண்ட வங்கி கணக்கை துவங்கி உள்ளோம் .

விவசாயிகளுக்கு சாயில் கார்டுகள் வழங்கி உள்ளோம். தூய்மை இந்தியா திட்டம் மூலம் சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்

சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்குகளில் செலுத்துவதன் மூலம் சட்ட விரோத சமையல் எரிவாயு இணைப்புகளை துண்டித்து உள்ளோம்

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் பல தொழிற்சாலைகள் இந்தியாவில் துவங்க உள்ளது.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருக உள்ளது.ஊழல் மற்றும் லஞ்சம் அறவே ஒழிந்து உள்ளது .பெண் குழந்தைகளுக்கு அதிகவட்டி தரும் விதத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வந்துள்ளோம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இப்போது சீனா விற்கு அடுத்த படியாக வரும் அளவிற்கு உயர்ந்து உள்ளோம் .ஸ்டீல் உற்பத்தியில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தை பிடித்து உள்ளோம்.ரயில்வே பட்ஜெட் மூலமும்,மத்திய பட்ஜெட் மூலமும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.பொருளாதார வளர்ச்சியை அதிகரித்ததன் மூலம் இந்தியா மீண்டும் முன்னேற்ற பாதையில் செல்கிறது

————————————————————————————-
பத்திரிகையாளர்:அதிகாரிகளுக்கு அதிக அளவில் அதிகாரம் குடுத்து உள்ளீர்கள் .மாநில வாரியாக சென்று பரிசோதனை செய்ய சொல்லி உள்ளீர்கள்.அவர்கள் திறம்பட செயல்படுகிறார்களா?

மோடியின் பதில் :நன்கு செயல்படுகிறார்கள்
—————————————————————————————-

பத்திரிகையாளர்:நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியினரும்,காங்கிரஸ் கட்சியினரும் ஏழைகளின் ஆதரவாளர்கள் தாங்கள் தான் என்று காட்டி கொள்ள மிகுந்த சிரமபடுகிரீர்களே ?

மோடியின் பதில் :காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்கள் ஏழைகளாகவே இருந்தனர்.அறுபது ஆண்டுகளாக .காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெரும் நோக்கிலயே செயல்பட்டது ஆனால் எங்கள் ஆட்சி நான் மேலே குறிப்பிட்டது போல ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த பாடுபடுகிறது .காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிலகரி ஊழல்,2 ஜி ஊழல்,காமன்வெல்த் ஊழல் நாட்டின் ஏழை மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் தர வில்லை.நாங்கள் முத்ரா வங்கி ஆரம்பித்து உள்ளோம்.இதன் மூலம் நாட்டில் 6 கோடி சிறு குறு தொழில் செய்யும் மக்கள் பயனடைவார்கள் .அவர்களில் 61% மக்கள் பிற்படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை மக்களே ஆவார்கள் .எங்கள் ஆட்சியில் சமையல் எரிவாயு மானியம் ஏழை மக்களுக்கு "மட்டும்" செல்கிறது.சட்ட விரோத சமையல் எரிவாயு இணைப்புகளை துண்டித்து உள்ளோம்.மேக் இன் இந்தியா மூலம் இளைஞர்களை வேலையில் அமர்த்துவதற்கு தனி அமைச்சகம் அமைத்து உள்ளோம் .

காங்கிரஸ் கட்சியினர் அறுபது ஆண்டுகளில் இதெல்லாம் செய்தார்களா.மக்கள் தினம் தினம் காங்கிரஸ் கட்சியினரிடம் மோடியால் ஒன்பது மாதத்தில் இதெல்லாம் செய்ய முடிகிற போது நீங்கள் ஏன் அறுபது ஆண்டுகளாக செய்யவில்லை என்று கேட்கின்றனர் .காங்கிரஸ் கட்சியினர் தினம் தினம் பொதுமக்களிடம் அம்பலமாகின்றன்ர்

———————————————————————————-
பத்திரிகையாளர்:ராஜ்யசபாவில் உங்களுக்கு பெரும்பான்மை இல்லையே.எப்படி நிலைமையை சமாளிகிரீர்கள் ??

மோடியின் பதில் :உண்மையில் நான் அனைத்து கட்சியினர்க்கும் நன்றி சொல்ல வேண்டும் .நான் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒட்டு மொத்தமாக 36 மசோதாக்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி உள்ளோம் .பல கட்சிகளுக்கு பல வியூகம் இருக்கலாம்.இன்சூரன்ஸ் மசோதா மற்றும் பல மசோதாக்கள் இன்னும் கிடப்பில் உள்ளது..கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர் கட்சிகளோடு கலந்து ஆலோசித்து ,தேவையான திருத்தங்களை செய்து அனைவரும் ஏற்று கொள்ளும் வண்ணம் இனி மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்

—————————————————————————————
பத்திரிகையாளர்:பிரான்ஸ்,ஜெர்மனி,கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிறீர்கள் எதற்காக ?

மோடியின் பதில் :இந்த மூன்று நாடுகளும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஹைட்ரோகார்பன் வளம் கனடாவில் நிறைந்து உள்ளது .
உற்பத்தி துறையில் ஜெர்மனி ,பிரான்ஸ் நாடுகள் சிறந்து விளங்குகிறது .நமது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு அது மிகவும் பயன்படும்

—————————————————————————————
பத்திரிகையாளர்:பாகிஸ்தான் பிரதமரை உங்கள் பதவி ஏற்ப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள் .இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை மீண்டும் தொடருமா??

மோடியின் பதில் :பாகிஸ்தான் மட்டும் இல்லை அனைத்து சார்க் நாடுகளோடும் இந்தியா நட்பு நாடாகவே இருக்க விரும்புகிறது .பாகிஸ்தானை பொறுத்தவரை தீவிரவாதத்தை ,வன்முறையை மூட்டை கட்டி வைக்கும் வரை பேச்சுவார்த்தை இல்லை

—————————————————————————————–
பத்திரிகையாளர்:சீனாவிற்கு பயணம் மேற்கொண்டீர்கள்.எல்லை பிரச்சனை குறித்து பேசினீர்களா ?

மோடியின் பதில் :பேச்சு வார்த்தை நடத்தினேன்,இரு நாடுகளும் ஏற்று கொள்ளும் விதமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று நானும் சீன அதிபரும் முடிவெடுத்து உள்ளோம்

————————————————————————————-
பத்திரிகையாளர்:காலம் மாறி பெய்யும் மழை போன்ற வற்றால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்படுவதோடு அல்லாமல் அதன் விளையும் உயருகிறது.இதனை சரிசெய்ய என்ன திட்டம் வைத்து உள்ளீர்கள் ???

மோடியின் பதில் :நாங்கள் ஆட்சிக்கு வரும்போது விலைவாசி விண்ணை முட்டியது.பருவமழையும் பொய்த்து போனது..ஆனாலும் எங்களால் முடிந்த வரை பணவீக்கத்தை காட்டுக்குள்ளே வைத்து இருகிறோம் .இயற்க்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு என்றும் தயார் .மாநில அரசுகளுடன் இணைந்து இந்த பிரச்சனையை சரி செய்வோம்

—————————————————————————————
பத்திரிகையாளர்:வசதி படைத்த மக்களை சமையல் எரிவாயு மானியம் வாங்குவதை கைவிட சொல்கிறீர்கள்.மானியத்தை ரத்து செய்ய திட்டம் உள்ளதா ??

மோடியின் பதில் :மானியம் என்பது சரியான நபர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் .அதனால் தான் வசதி படைத்த மக்களுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கிறேன் மானியத்தை தியாகம் செய்யுங்கள் என்று .மீண்டும் உறுதி கூறுகிறேன் மானியம் சட்ட விரோத இணைப்பு

வைத்து இருபவர்கள் கைகளுக்கு செல்வதை தான் அரசு தடுக்க முயற்சிக்கிறது.மற்றவர்களுக்கு அல்ல. பஹால் திட்டம் உலகத்திலயே பெரிய மானிய திட்டமாக உருவெடுக்கும்.

—————————————————————————————–
பத்திரிகையாளர்:இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் எளிதான தொழிலாளர் சட்டம் வேண்டும் என்கிறார்கள் .இந்திய தொழிலாளர் சட்டத்தை எவ்வாறு சீர்திருத்தம் செய்வது
மோடியின் பதில் : இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தம் என்பது இந்த நாள் வரை தொழிற்சாலைகளுக்கு ஆதரவாகவே உள்ளது.ஆனால் எங்கள் அரசு முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே இருக்கும். மேலும்,லட்சகணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்க பட வேண்டும் .எனவே தொழிலார்கள் பாதுகாப்பை,வாழ்வாதாரத்தை உறுதி செய்ய "ஷ்ராமேவ் ஜெயதே" என்ற திட்டத்தை நான் வகுத்துள்ளேன் .இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட இது சம்பந்தமாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .தொழிளார்களுக்கு வழங்கப்படும் பென்சன்,இன்சூரன்ஸ் போன்றவற்றில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

—————————————————————————————-
பத்திரிகையாளர்:இந்தியாவில் தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்து உள்ளது.ஆனால் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் அமெரிக்கா போன்ற நாடுகள் நம்மை விஞ்சி உள்ளது .என்ன திட்டம் வைத்து உள்ளீர்கள் இதனை சரி செய்ய ?

மோடியின் பதில் :இது சரி செய்ய வேண்டிய விஷயம் தான் .இதற்காக இளைஞர்களிடையே இருக்கும் "திறமை படைத்த இளைஞர்களை" கண்டுபிடிக்க மத்திய அரசு இப்போது புதிதாக திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தை உருவாக்கி உள்ளது .இப்போது தாக்கல் செய்ய பட்ட பட்ஜெட்டில் கூட Innovation Mission (AIM) and Self-Employment and Talent Utilisation (SETU) போன்ற வற்றை அறிவித்துஉள்ளோம் .வரும் நாட்களின் இந்த அமைப்புகள் பல நிகழ்சிகளை நடத்த உள்ளனர் . ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி,புதுமை திறன் மேம்படுத்துதல் , தொழில் முனைவோர் கண்டறிதல் போன்றவற்றில் இந்த அமைப்புகள் கவனம் செலுத்தும் .டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி உள்ளோம் . பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் வலு படுத்தும் முயற்சியில் உள்ளோம்

————————————————————————————-

 

பத்திரிகையாளர்:டில்லி தேர்தலில் பா.ஜ.க வின் தோல்வி மோடி அலை முடிந்து உள்ளதை காட்டுகிறதா ?

மோடியின் பதில் :இது அரசியல் சம்பந்தப்பட்டது.டில்லி மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன் .2014 ஆம் ஆண்டு பொது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மோடி அலை இல்லை என்று சத்தியம் செய்தவர்கள் இன்று மோடி அலை முடிந்துள்ளது என்று சொல்கிறார்கள் .ஜார்கண்ட்,மகாராஷ்டிரா,ஜம்மு காஷ்மீர்,ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று உள்ளது .அஸ்ஸாம்,பஞ்சாப்,மத்திய பிரதேஷ்,ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று உள்ளது .பா.ஜ.க விற்கு மக்கள் நாடு முழுவதும் ஆதரவாகவே உள்ளனர்
—————————————————————————————–

பத்திரிகையாளர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க.-பீ-டீ-பீ கூட்டணி ஆட்சி உள்ளது.ஆட்சி அமைத்த நாளில் இருந்தே சர்ச்சை ,முரண்பாடுகள்.சமீபத்தில் மஷ்ரத் அலாம் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .ஜம்மு அரசின் செயல்பாடுகள் உங்களை மகிழ்விக்கிறதா?

மோடியின் பதில் :இது மிகவும் சிக்கலான பிரச்சனை.நானும் எனது அரசும் தீவிரவாததிலோ ,நாட்டின் பாதுகாபிலோ சிறுதும் வளைந்து கொடுக்க போவதில்லை .ஜம்மு காஷ்மீர் கூட்டணி அரசு இந்த பிரச்சனைகளுக்கு விரைவில் முற்று புள்ளி வைக்கும் .மாநில வளர்சிகாகவே ஜம்மு காஷ்மீர் கூட்டணி அரசு செயல்படுகிறது
—————————————————————————————

பத்திரிகையாளர்:தேர்தல் பிரசாரத்தின் போது வடகிழக்கு மாநிலங்களை தேசிய நீரோட்டதிர்க்கு கொண்டு வருவதை குறித்து பல முறை பேசி உள்ளீர்கள்.உங்கள் ஆட்சியில் அந்த பணி நடை பெறுகிறதா ?

மோடியின் பதில் :கடந்த 10 மாதத்தில் இருமுறை சென்று வந்து உள்ளேன் வட கிழக்கு மாநிலங்களுக்கு .அந்த மக்களிடம் மிக பெரிய திறமை மற்றும் உழைப்பு இருக்கிறது .முதற்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களின் குடிநீர்,மின்சாரம்,ரயில் போக்குவரத்து போன்ற பிரச்சனையை தீர்க்கும் பணியில் எனது அரசு செயல்படுகிறது .இதற்க்கு பின்னர் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகிவற்றை மேம்படுத்த முடிவு செய்து உள்ளோம்.நான் நாட்டு மக்களிடம் வடகிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்கனவே கோரிக்கை வைத்து உள்ளேன் .சமீபத்தில் அனைத்து மாநில காவல்துறை டி.ஜி க்கள் கூட்டம் அஸ்ஸாமில் நடந்தது .இது போன்ற செயல்பாடுகளால் விரைவில் வடகிழக்கு மாநிலங்கள் தேசிய நீரோட்டத்தில் முழுவதும் இணையும் .தேசிய வளர்ச்சியிலும் இந்த மாநிலங்கள் பங்குகொள்ளும்

Leave a Reply