ஏமன் நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டவிவகாரத்தில் மத்திய அமைச்சர் விகே. சிங்கை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி பேசியிருந்தார்.

டெல்லியில் நேற்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் விகே. சிங்கை அவர் புகழ்ந்து பேசியி ருந்தார். இதற்கு மத்திய வெளியுறவு விவகார துறை இணை அமைச்சர் விகே. சிங், பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக நான் எடுத்துகொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டியுள்ளார். அதற்காக நன்றி. இருந்தாலும் அவருடைய வழி காட்டுதல் மற்றும் சீரிய தலைமையால் தான் என்னால் அது சாத்திய மாயிற்று என்றும் வி.கே. சிங் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நான் நிறைவேற்றியுள்ளேன். அதில் எனக்கு திருப்தி என்றும் விகே. சிங் அடக்கத்தோடு கூறினார்.

Leave a Reply