நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கபூர்வமாக அமையவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் பகுதி இன்று தொடங்குகிறது. முதல் நாளிலேயே நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அவையில் அனல்பறக்கும் விவாதம் எழும்பும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பிரதமர் தனது ட்விட்டரில், "நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நலன்பயக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் மே 8-ம் தேதி நிறைவடைகிறது. மாநிலங்களவையின் கூட்டம் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 13-ல் முடிகிறது.

Leave a Reply