ஆட்சி மொழியான இந்தியில், சிறந்து விளங்கு வோருக்கு வழங்கப்படும் விருதுகளில் உள்ள, முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் பெயர்களை நீக்க, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆண்டு தோறும், செப்டம்பர் 14ம் தேதி, 'இந்தி தினம்' (இந்தி திவஸ்) கொண்டாடப்படுகிறது. அன்றையதினம், ஆட்சி மொழியான இந்தியை, முற்போக்கான வழி முறையில் பயன் படுத்துபவர்களுக்கு, கடந்த 1986 முதல், 'இந்திரா காந்தி ராஜ்பாஷா புரஸ்கார்' மற்றும் 'ராஜிவ் காந்தி ராஷ்ட்ரிய க்யான்-விக்யான் மவுலிக் புஸ்தக் லேகன் புரஸ்கார்' என்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைச்சகங்கள், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்று வோருக்கான இந்த விருதுகள், இனிமேல், 'ராஜ் பாஷா கீர்த்தி புரஸ்கார்' மற்றும் 'ராஜ் பாஷா கவுரவ் புரஸ்கார் யோஜ்னா' என்ற பெயரில் வழங்கப்படும்.

இது குறித்து விளக்கம் தந்துள்ள உள்துறை அமைச்சகம், 'எதிர் கட்சிகள் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகின்றன , ஆனால் இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; பெரும்பாலான திட்டங்கள் மற்றும் விருதுகள், இந்திரா, ராஜிவ் பெயரில் உள்ளன; நிர்வாக நடவடிக்கை காரணமாக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது' என, கூறியுள்ளது.

Leave a Reply