வயதான அர்ச் சகர்களின் பூணூலை 6 பேர் கொண்டகும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்றசம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகைதிருட்டு கும்பலா என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…

சென்னை மயிலாப் பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் திரு.விஸ்வநாத குருக்கள் அவர்கள் கோவிலில் பூஜையை முடித்து விட்டு இரவு வீடு திரும்பும் போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தில் வந்து முதியவரின் கன்னத்தில் அறைந்து அவரது கையைமுறித்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவமானபடுத்தி உள்ளனர். அவரது வேட்டியையும் கழற்றி எறிந்து கோழைத்தனமான செயலை செய்துவிட்டு துணிச்சலுக்கு பெயர்பெற்ற பெரியார் அவர்களின் பெயரை முழங்கிவிட்டு சென்றுள்ளனர்.

இந்தநபர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களா அல்லது நகைபறிக்கும் திருட்டுக் கும்பலை சேர்ந்தவர்களா என்று சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

கொள்கையோடு கொள்கை மோதவேண்டிய தருணத்தில் கொலைவெறித் தாக்குதலை முதியவர் மீது காட்டி இருக்கிற கோழைத்தனமான நபர்களை அந்த இயக்கம் எப்படி ஏற்றுக் கொள்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் தொடரும்போது அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொண்டால் நல்லது என்று கருதுகிறேன்.

இதுமாதிரியான தவறுகள் மேலும் நடக்காத வண்ணம் அந்த இயக்கங்களை சேர்ந்தவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். முதியோர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வியக்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply