விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தனது வேதனையை வெளிப்படுத்திய நரேந்திர மோடி, மனித உயிரைவிட முக்கியமானது எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மிபேரணியில் நேற்று ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக இன்று மக்களவையில் உறுப்பினர்கள் ஆழ்ந்தவேதனையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- " நேற்றய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள உறுப்பினர்களும் தங்கள் வேதனையை வெளிப் படுத்தினர். எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

மனித உயிரைவிட எதுவும் பெரிதல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை இதற்கு தீர்வுகாண அரசு முயன்று வருகிறது. உங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. நாட்டின் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நாங்கள் விவசாயிகளை உயிரிழக்க விடமாட்டோம்" இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுசெய்யும்" என்றார்.

Leave a Reply