டெல்லி பொதுக் கூட்டத்தில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை டெல்லி துணை கவர்னர் நஜிப்ஜுங், போலீஸ் கமிஷனர் பி.எஸ். பசி ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். மக்களவையில் இது குறித்து விவாதிக்க கோரி கடும் அமளி ஏற்பட்டதால் சபை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் ஆம் ஆத்மி கட்சியின் பொதுகூட்டம் நடந்த போது ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் நடந்த போதிலும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்து உரையாறினார். பொதுக் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்படாதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின்முன், பிஜேபிசார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவாலின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.

இதனிடையே இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கைய்யா நாயுடு, நிதின் கட்காரி ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். விவசாயியின் தற்கொலை உள்நோக்கம் கொண்டகொலை என்ற அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என்று டெல்லி பிஜேபி தலைவர் சதீஸ் உபத்தியாயா வற்புறுத்தி உள்ளார்.

Leave a Reply