மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு பதவியேற்று ஒராண்டு நிறைவுசெய்ய உள்ளது. இதனையடுத்து சாதனை விளக்கத்திற்கு தயாராகிவருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது. தற்போது ஒராண்டு நெருங்கிவருவதை முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளும் சாதனை விளக்கத்தை வெளிப் படுத்தும் வகையில் தயாராகிவருகிறது.

இதுகுறித்து தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் பீமல் ஜூல்கா கூறியதாவது: மோடி அரசின் வெளிநாட்டு கொள்கை,ஜன்தன் யோஜனா, சன்சாத் ஆதர்ஷ் கிராம்யோஜனா ஆகியவை குறித்து முன்னிலைப் படுத்தும் வகையி்ல் டி.வி மற்றும் ரேடியோக்களில் பாட்டு மற்றும் நாடகபிரிவினர் சாதனை விளக்கத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

Leave a Reply