நிலம் கையகமசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் சதிசெய்வதாக எதிர்க் கட்சிகள் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கட்காரி பேசியதாவது, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு விவசாயிகள், தலித்துகளுக்கு எதிரானது என்ற தவறானதோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள்.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்க் கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இது மத்தியஅரசுக்கு எதிரான அரசியல் சதியாகும். இந்த சதி தொடர்ந்து நடைபெறுகிறது. இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பொது மக்கள் பக்குவம் அடைந்துள்ளனர். மக்களவை பொதுத்தேர்தலில் பாஜகவை வெற்றிபெற செய்ததிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.

நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்த சில அரசியல் வாதிகள் மக்கள் மனதில் குழப்பத்தை விதைக் கிறார்கள். நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் செய்யப்பட்டுள்ள 5 திருத்தங்களில் ஒன்று கூட விவசாயிகளுக்கு எதிரானது இல்லை. இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.

Leave a Reply