மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களும் உடன் செல்கின்றனர்.

வரும் 27ம் தேதி நடைபெறும் மீனவர்கள் குறித்த கருத்தரங்கில் தமிழக மீனவர்கள் கலந்துகொள்கின்றனர். அதன் பிறகு 29-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்கள் அடைந்துவரும் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Leave a Reply