பாரத பிரதமர் மோடி டில்லி மெட்ரோ ரயிலில் தனியாக சென்று பயணித்து திடீர் ஆச்சரி யத்தை ஏற்படுத்தினார். டில்லி துல்லாகான் பகுதியில் இருந்து துவாரகாவரை செல்லும் மெட்ரோ ரயிலில் வந்து ஏறினார். இந்தரயில் பயணத்தை முழுமையாக ரசித்து பின்னர் டில்லியில் வந்து இறங்கினார்.இவர் ரயிலில்பயணிப்பது எந்த ஒரு மீடியாவுக்கும் தெரிவிக்கப்பட வில்லை. இந்தபயணம் குறித்து அவர் தனது டுவீட்டரில் தெரிவித்த பின்னரே வெளியேதெரிந்தது.

தனது டுவீட்டரில் பிரதமர் மோடி; மெட்ரோ திட்டத்தை உருவாக்கிய ஸ்ரீதரன்ஜி என்னிடம் அடிக்கடி மெட்ரோரயிலில் பயணித்து பாருங்கள் என பலமுறை சொல்லியுள்ளார். இந்தவாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. மிக அநுபவப் பூர்வமாக இருந்தது.

இந்தபயணம் மிக நன்றாக இருந்தது. இதற்கு ஏற்பாடுசெய்த மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள், ஸ்ரீதரன் ஜி உள்பட அனைவருக்கும் எனது நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply