மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் குறித்து பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். நேபாளம் தலை நகர் காத்மண்டுவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியிருந்தது.

இதனால் தலை நகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில், இதன்தாக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 என்ற அளவில் பதிவானது. நில நடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவலறிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நில நடுக்கம் உணரப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேபாள ஜனாதிபதி ராம் பிரதான் யாதவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வெளிநாடு சென்றுள்ள நேபாள பிரதமரை தொடர்புகொள்ள பிரதமர் நரேந்திர மோடி முயற்சிசெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply