திருவாரூருக்கு அருகில் எமர்பேரூர் என்ற ஊரில் சிறந்த சிவபக்தரான நமிநந்தி அடிகள் வந்தார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராஜர் எழுந்தருளி வீதிவலம் வருவார்.இப்படித்தான் திருவிழாவில் தியாகராஜரைத் தரிசிக்க நமிநந்தி அடிகள் சென்றார். பக்தியோடு இறைவனை வணங்கி வீடு திரும்பினார்.
திருவிழாக் கூட்டத்தில் பல ஜாதி மக்களுடன் கலந்து நின்றதால், தீட்டு ஏற்பட்டுவிட்டது என எண்ணி, மறுநாள் காலையில் குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழையலாம் எனக் கருதி, வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டார்.

அப்போது இறைவன் அவரது கனவிலே தோன்றி, “அன்பனே! என்னைத் தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவரும் தூய்மையானவர்களே. அவர்களில் உயர்வு தாழ்வு பார்த்து தீட்டு ஏற்பட்டுவிட்டது என்று நீ நினைப்பது தவறு” என்று கூறி மறைத்தார்.

கண் விழித்த நமிநந்தி அடிகள் செய்த தவறை எண்ணி வருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்த அவர், எழுந்து வீட்டில் உள்ளே சென்று பூஜையில் அமர்ந்தார்.

– நமிநந்தி அடிகள் 63 நாயன்மார்களில் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.