சில தினங்களுக்கு முன் மத்திய அரசு நீதித் துறைச்சீர்த்திருத்தங்கள் தொடர்பான 3 நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 24 உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சி நாளில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையும் வந்ததால், கேரளத்தைச் சார்ந்தவரான உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் அளித்த விருந்தில் கலந்துகொள்ள இயலாது என்பதை விளக்கி, பிரதமருக்கு, நீதிபதி குரியன் ஜோசப் எழுதிய கடிதம்,பிரதமருக்குக் கிடைக்கும் முன், பத்திரிக்கைகளுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பிரதமருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிககும், குரியன் ஜோசப் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள் கடிமையான கண்டனத்துக்குரியவை. " புனித வெள்ளி அதனைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை, வார இறுதியில் வருகின்ற காரணத்தினால், மாநாடு நடத்த வேண்டாம்." இத்துடன் தந்து கடிதத்தை முடிக்கவில்லை. புனித ஞாயிறு பண்டிகையின் பொது மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். நீதிபதி குரியன் ஜோசப், சர்வாதிகாரியைப் போல் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், சிறுபான்மையினருக்கு ஆபத்து என்ற சித்திரத்தை உருவாக்கி மேற்கொள்ளும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

இதுபற்றி முழுமையாக விவாதம் செய்வதற்கு முன், சில சம்பவங்களை குறிப்பிட வேண்டும். 2004-ம் வருடம் அருந்ததியர் சமூகத்திற்கு உரிய வால்மீகி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறையாக அறிவித்த சமயம், இதுபோல் நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாகன மாநாடு நடைபெற்றது. அச்சமயத்தில் ஹிந்து மதத்தைச் சார்ந்த நீதிபதி எவரும் இம்மாதிரியான கேள்விகளை எழுப்பவில்லை. இதைப்போலவே, 2007-ம் வருடம் புனித ஞாயிறு தினத்தன்று நீதித்துறை மாநாடு நடைபெற்றது. 2009-ம் இந்த நாடு விடுதலை பெற்ற சுதந்திர தினத்தன்று நீதித்துறை சம்பந்தமான மாநாடு நடைபெற்றது. அப்பொழுது இம்மாதிரியான கேள்விகளை எவரும் எழுப்பவில்லை. காரணம், அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதித் துறையின் மாண்புகளைக் காப்பாற்றியவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதே சமயத்தில், மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சோனியா காந்தி என்பதால் எந்த கிறிஸ்தவரும் வாய் திறக்கவில்லை.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவர் கொடுத்த அறிக்கையையும் சற்றே கவனிக்க வேண்டும். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதி கே.டி.தாமஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தற்போது நான் இந்த இடத்திலிருந்தால், காலையில் பிராத்தனைக்குச் சென்றுவிட்டு, பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வேன்" என்றார். அரசியல் ஷரத்து 32-ல் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும், இதைக் கேள்வி கேட்க முடியாது என்றும், குறிப்பிட்டுள்ளனர். அதைவிட முக்கியமான அம்சம், பணி நாட்களில் இம் மாதிரியான மாநாடு நடத்துவதால், 24 உயர் நீதிமன்ற நீதிபதி பணிகளும் உச்ச நீதிமன்றத்தின் பணிகளும் பாதிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் கூறினார். இதை கிறிஸ்தவர்கள் பிரச்சனையாக்குவது தவறானதாகும். ஐவரும் ஒரு கிறிஸ்துவர் என்பதை மறந்து விடக்கூடாது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.கலித்தும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.கே.சம்சுதீனும், குரியன் ஜோசப்புக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல், நீதிபதி பி.கே.சம்சுதீன் விடுத்துள்ள அறிக்கையில், புதிய அரசு அமைந்தவுடன், சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்றார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கருத்துக்களை வைத்தார் என்று தெரியவில்லை.

திருவாளர் குரியன் ஜோசப் பற்றிய சில சம்பவங்களை நினைவுபடுத்திப் பார்த்தால், அவரது உண்மையான சொரூபம் நன்கு தெரியும். 2012-ல் கேனன் லா (நியதி சட்டங்கள்) சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெறுவதற்கு முக்கியமான நபர். போப் பாண்டவரின் கட்டளைப் படி, நியதி சட்ட திட்டங்களை உருவாக்கும் அமைப்பான கேனன் லா என்ற அமைப்பில் குரியன் ஜோசப் உறுப்பினர். இதில் இருப்பவர்கள் கிறிஸ்துவ பாதிரியாரும் பிஷப்புகளும் மட்டுமே. கேரளத்தில் சர்ச்சில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர். முக்கியமாக, கத்தோலிக்கப் பாமர மக்களின் ஒரே பிரதிநிதியாகக் கலந்து கொள்வதாகக் கூறுவார். 2014-ல் கத்தோலிக்க மத குருமார்கள், பிஷப்களின் மாநாடு நடைபெற்றது, இந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளராக இருந்தவர் குரியன் ஜோசப்.

2012-ம் வருடம் மே மாதம் ஹிமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, பரீதாபாத் (ferithapath)ஆர்ச்பிஷப்பிற்குப் நடத்த பாராட்டு விசாவில் வாழ்த்துரை வழங்கியவர்களில் முதன்மையானவர். உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தபோது, கிறிஸ்தவ மத தொலைக்காட்சியான சலேம் தொலைகாட்சியில், பைபிள் பிரச்சாரம் வாரம்தோறும் சனிக்கிழமை ஒளிப்பரப்பட்டது. இந்திய அரசியல் சாசனப்படி, பதவிப் பிராமணம் எடுக்கும் நீதிபதி இவ்வாறு செயல் படுவது சரியா என்பதை, எப்போதாவது சிந்தித்தித்து இருப்பாரா என்பது தெரியவில்லை. மதத்தின் நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நீதிபதி குரியன் ஜோசப், எவ்வாறு மற்ற மதத்தினருக்கு பாகுபாடு இல்லாமல் நீதிவழங்கி இருப்பவர் என்பது தெரியவில்லை.

உண்மையில் உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு விடுமுறை விடுகின்றார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். இதில் சில உண்மைகள் நன்கு விளங்கும்.90 சதவீதத்திற்கு மேல், கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற அமெரிக்காவில், புனித வெள்ளிக்குப் விடுமுறை கிடையாது. அமெரிக்க நாட்டின் 13 மாநிலங்களில் மட்டிமே புனித வெள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் கூட புனித வெள்ளிக்கு பதிலாக வேறு நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிரேசில் நாட்டில் கூட புனித வெள்ளிக்கு விடுமுறை கிடையாது. சீனாவிலும் பர்மாவிலும் புனித வெள்ளிக்கு விடுமுறை கிடையாது.

இஸ்லாமியர்கள் வாழும் ஆப்கானிஸ்தான், அவுதி அரேபியா,ஈரான்,ஈராக்,எகிப்து போன்ற நாடுகளில் புனித வெள்ளிக்கு விடுமுறை கிடையாது. இந்த நாடுகளில் வெளிப்படையாகக் கிறிஸ்தவர்கள் பிராத்தனை நடத்தவும் இயலாது. கிறிஸ்தவர்கள் ஞாயிறு சர்ச்சுக்கு செல்வதற்கு பதிலாக இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் வெள்ளிக்கிழமையே சர்ச்சுக்கு செல்ல வேண்டும் என்ற விதி முறையும் உள்ளது. இந்தியாவிலிருந்து அரபு நாடுகளில் பணியாற்றும் கிறிஸ்தவர்கள், அங்கே புனித வெள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என முரண்டு பிடிக்க இயலாது. மீறினால், நாடு கடத்தப் படுவார்கள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.

நீதிபதி குரியன் ஜோசப் கவனத்திற்கு: தனக்கு பாதகமாக இருக்கும் சில சம்பவங்களை பொது மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதில்லை. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்களாக இருப்பதால், 4-ம் நூற்றாண்டில், சிரியா நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி, நாடு கடத்தப்பட்ட போது, சிரியாவை விட்டு வெளியேறியவர்கள், தென்னிந்தியாவில் புகலிடம் அடைந்தார்கள். அவ்வாறு வந்தவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள், இதற்கு முக்கியமான காரணம் ஹிந்துக்கள் சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

Leave a Reply