உழவர்களுக்கு உயர்வளிக்கும் உணவுப் பூங்காக்கள் பாரதம் முழுவதும் 17 பெருஉணவுப் பூங்காக்கள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உழவர்கள், வர்த்தகர்கள்,

ஏற்றுமதியாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த பெருஉணவுப் பூங்காக்களில் எல்லா வசதிகளும் இருக்கும்.

மாநில அரசுகளிடமிருந்து 72 விண்ணப்பங்களும் வந்தன. இவற்றை நன்கு பரிசீலனை செய்தோம். 10 பெருஉணவுப் பூங்காக்கள் அமைக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 7 பெருஉணவுப் பூங்காக்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற மத்திய உணவுபடுத்துதல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத்கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி,கேரளாவில் பாலக்காடு, ஆழப்புழை, ஆந்திராவில் கிருஷ்ணா, தெலுங்கானாவில் கம்மம் , மகபூப்நகர், மகாராஷ்டிராவில் அகமதுநகர், வார்தா,ஒடிசாவில் குர்தா, மத்தியப்பிரதேசத்தில் திவாஸ், குஜராத்தில் கட்ச், பீகாரில் பக்சர், அரியானாவில் பானிபட், சோனிபட்,பஞ்சாபில் கபூர்தலா, லூதியானா என மொத்தம் 17 இடங்களில் அமையும் பெருஉணவுப் பூங்க்காக்களால் சுமார் ரூ.6000 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

பெருஉணவுப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. பெருஉணவுப் அமைப்பதற்கு நிலத்தின் விலை தவிர்த்து திட்டத்துக்கான மொத்த முதலீட்டில் 50 சதவீதத்தை மத்திய அரசு மானியத்தை அளிக்கும். இது அதிகபட்சம் ரூ.50 கோடி என வரையறுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விளையும் காய்கறிகள், கனிகள் மற்றும் உணவு தானியங்களில் 2 சதவீதம் மட்டுமே பதப்படுத்தப்படுகிறது என்று புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. பெருஉணவுப் பூங்காக்களை அமைப்பதன் மூலம் விளைபொருட்கள் வீணாவதைக் குறைக்க முடியும்.

இதுவரை மொத்தம் 42 பெருஉணவுப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 10 பெருஉணவுப் பூங்கக்களை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது, வரவேற்கத்தக்கது.

உழவர்கள் சேற்றில் கால்வைத்தல்தான் துய்ப்போர் சோற்றில் கவைக்க முடியும். எனவே உழவர்களுக்கு ஏற்றமளிக்கும் பெருஉணவுப் பூங்காக்களின் எண்ணிக்கையையும் செயல்பாட்டையும் உயர்த்த அயராதுழைப்போம்.

Leave a Reply