"இன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்ய, எனது மனம் இடம் கொடுக்கவில்லை, கனக்கிறது, மனம் கவலையில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது, ஆலங்கட்டி மழை, பருவம் தப்பிப் பெய்யும் மழை, விவசாயிகளின் பெருந்துயரம் ஆகியவை நடைபெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பிஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது, அதில் பலர் உயிரிழந்தார்கள், பெரும் இழப்பு ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது.

ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம். இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் சில மாநிலங்களின் பல பகுதிகளில் பலர் உயிரைக் குடித்திருக்கிறது. பலர் தங்கஙள உடைமைகளை இழந்துவிட்டனர். ஆனால், நேபாளம் சந்தித்திருக்கும் பேரழிவோ படு பயங்கரமானது.

நான் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்தப் பேரழிவு எத்தனை கொடூரமானதாக இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நேபாளம் எப்படிப்பட்ட துயரத்தை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது, அவர்களின் குடும்பங்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்ற இவற்றையெல்லாம் என்னால் மனதில் எண்ணிப் பார்க்க முடிகிறது.

ஆனால், ஹிந்துஸ்தானம் உங்களின் சங்கட காலத்தில் உங்களுக்கு துணை நிற்கிறது. நேபாளத்திலும் சரி, இந்தியாவின் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ள பிற பகுதிகளிலும் சரி, உடனடி நிவாரணத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதன்மையான செயல் மீட்பு நடவடிக்கை. இப்போதும் கூட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடக்கும் பல பேர்கள் உயிரோடு இருக்கலாம். அவர்களை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும். வல்லுனர்களின் குழு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே, இந்தப் பணியில் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மோப்ப நாய்கள் இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை மோப்பம் பிடித்துத் காட்டிக் கொடுக்கும். அதிக எண்ணிக்கையில் மக்களின் உயிரைக் காப்பதே எங்களது முழு முயற்சியாக இருக்கும்.

மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டாக வேண்டும். மறுசீரமைப்புப் பணிகள் நீண்ட காலம் தொடரக் கூடும். ஆனால் மனிதத்துவத்துக்கென்று ஒரு ஆற்றல் இருக்கிறது. 125 கோடி இந்தியர்களுக்கும் நேபாளிகள் சொந்தக்காரர்கள். அவர்களது துயரம் நமது துயரம். இந்த துயரம் நிறைந்த வேளையில் ஒவ்வொரு நேபாளியின் கண்ணீர் துடைக்கவும், அவர்களைக் கைப்பிடித்து கரை சேர்க்கவும், துணை நிற்கவும் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

சட்ட மேதை அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த வேளையிலும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமை நடப்பதா… அதை நாம் அனுமதிப்பதா?

இதைக்கண்டு என் மனம் வேதனைப்படுகிறது. ஏழை என்பதற்காக, ஒரு நபரை இந்த கொடுமைக்கு ஆளாக்கலாமா… அதை நாம் அனுமதிக்கலாமா?

அண்மையில் நான் பிரான்ஸ் சென்றிருந்த போது, முதலாம் உலக போரில் மாண்டவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு.

நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது ஒரு பக்கம், இது முதலாம் உலகப்போரில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் சாகசத்துக்கும் தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்த்துகிறது. மேலும் சேவா பரமோ தர்ம என்ற உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது; 15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம் செய்தார்கள் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இந்தியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப் போரின் போது கிட்டத்தட்ட 74000 இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதும் கூட பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு சாகசத்துக்கான விருது அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல, மேலும் 11 வீரர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே நமக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில், இந்தப் போர் நடைபெற்ற போது, 1915ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான் அங்கே என் அஞ்சலியைச் செலுத்தச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்துக்குத் தலைவணங்கச் சென்றேன்.

உலகின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், உயிர்த் தியாகமும் செய்கிறது; இதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா?"

ஏமன் நாட்டில் நமது ஆயிரக்கணக்கான இந்திய சகோதர சகோதரிகள் சிக்கியிருந்தார்கள். போரின் கோர தாண்டவத்துக்கு இடையே, குண்டு மழைக்கு நடுவே, இந்தியர்களை மீட்பது, அதுவும் உயிரோடு மீட்பது என்பது ஒரு மகத்தான பணி மட்டுமல்ல, இடர்கள் நிறைந்ததும் கூட. ஆனால் இதை நம்மால் சாதிக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையை மீட்டுக் கொண்டு வந்த போது, மனிதத்துவத்தின் ஆற்றல் வெளிப்பட்டது. குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது, மரணத்தின் கருமை கப்பிக் கிடக்கிறது, இந்த நிலையில் பிறந்த ஒரு வாரமே ஆன ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருப்பது மனதுக்கு நிறைவை அளிக்கிறது.

நான் அயல்நாடுகளில் எங்கு சென்றாலும், ஒரு விஷயத்துக்காக எனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் கிடைத்தன. அது, யேமன் நாட்டில் நாம் கிட்டத்தட்ட 48 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது என்பதற்காகத் தான். அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், என பல நாட்டு குடிமக்களுக்கும் நாம் உதவி இருக்கிறோம். இதன் காரணமாக, பாரத கலாச்சாரத்தின் மாபெரும் குணமான சேவா பரமோ தர்ம, அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உலகம் உணர்ந்து கொண்டது.

Tags:

Leave a Reply